திண்டுக்கல் : திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் நாகராஜ்(57). இவரது தம்பி முருகேசன் இருவருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட முன் விரோதத்தில் யுவராஜ்(32). தாமோதரன்(23). ராஜ்(21). மணிகண்டன்(20). ஆகிய 4 பேரும் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக தாக்கியதில் நாகராஜ் படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா