கன்னியாகுமரி: கடந்த 2019 ஆம் ஆண்டு பண்டார விளை பகுதியை சேர்ந்த தங்கையன் என்பவரது மகன் பிரான்சிஸ் சேவியர் (57). என்பவரை அதே பகுதியை சேர்ந்த சில்வெஸ்டர் என்பவரது மகன் ஜான் பேபி (40). என்பவர் ரப்பரை பதப்படுத்த பயன்படுத்தும் அமிலத்தை முகத்தில் ஊற்றி காயங்களை ஏற்படுத்தி உள்ளார். திருவட்டார் காவல் நிலையத்தில் குற்ற எண் 253/2019, U/S 294(b), 324, 326(A), 506(2) IPC ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கு விசாரணையானது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியான பண்டாரவிளை பகுதியை சேர்ந்த சில்வெஸ்டர் என்பவரது மகன் ஜான் பேபி என்பவருக்கு பத்து வருடம் சிறை தண்டனை மற்றும் 5000/-ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் தீவிரமாக செயல்பட்ட பொது வழக்கறிஞர், முன்னாள் விசாரணை அதிகாரி, தற்போதைய விசாரணை அதிகாரி, மற்றும் நீதிமன்ற அலுவல் காவலர் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
















