கடலூர்: நெய்வேலி சேப்பளாநத்தம் காமராஜ் நகரைச் சேர்ந்த ராஜ்மோகன் (40). தந்தை ராஜேந்திரன், கடந்த (18.10.2025) அன்று தனது குடும்பத்துடன் வடக்குத்துவில் உள்ள ‘கன்னிகா பரமேஸ்வரி’ துணிக்கடை சென்றிருந்தார். அப்போது, அவரின் மகள் கழுத்தில் அணிந்து இருந்த ஒரு பவுன் தங்கச்செயின் தவறுதலாக அறுந்து தரையில் விழுந்தது. அந்த நேரத்தில், துணி எடுக்க வந்திருந்த ஒரு பெண், தரையில் பட்டு கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்துச் சென்றார். சம்பவத்துக்குப் பிறகு கடையில் உள்ள CCTV பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், அந்தப் பெண் Gpay ஸ்கேனர் மூலம் செலுத்திய பணத்தின் விவரங்கள் பெறப்பட்டு, வங்கி உதவியுடன் அவரின் முகவரி கண்டறியப்பட்டது.
இதன் மூலம், காவல்துறை சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டுபிடித்து, 1 பவுன் தங்க நகையை மீட்டது. பின்னர், இன்று அந்த நகை உரியவரான ராஜ்மோகன் அவர்களுக்கு காவல் ஆய்வாளர் திரு. வீரமணி அவர்கள் முறையாக ஒப்படைத்தார். தங்க நகையை மீண்டும் பெற்ற குடும்பத்தினர், வேகமான மற்றும் சிறப்பான நடவடிக்கைக்காக காவல்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.
















