திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கூனியூர் பஸ் டிப்போவில் செக்யூரிட்டியாக பணிபுரியும் சுத்தமல்லி, பாப்பான்குளத்தைச் சேர்ந்த முருகேசன், (41). (24.02.2025) அன்று டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்துதை சோதனை செய்த போது அதில் ஒரு பையில் ரூபாய் 60,000/- பணம் மற்றும் செல்போன் கேட்பாரற்று இருந்துள்ளது.
உடனே அவர் சேரன்மகாதேவி காவல் நிலையத்திற்கு வந்து ஒப்படைத்து அதை உரிய நபரிடம் சேர்க்க கேட்டுக் கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப, முருகேசனை நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்