தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் பிரதான சாலை கடை வீதியில், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை கிடந்துள்ளது. அப்பொழுது அவ்வழியே வந்த திரையரங்கு மேலாளராகப் பணிபுரியும் இளங்கோ என்பவர் அதனை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில், கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல் மருத்துவராக பணிபுரியும் ஆயிஷா பா்வீன் தன்னுடைய நகையை தவறவிட்டதாகப் அளித்த புகாரை விசாரணை செய்தபோது திரையரங்கு மேலாளர் கண்டெடுத்த நகை மருத்துவர் ஆயிஷா பர்வீன் தவறவிட்டது என தெரிய வந்தது. இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் தமிழினியன், காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார் ஆகியோர் நகையை மருத்துவர் ஆயிஷா பர்வீனிடம் ஒப்படைத்தனர். மேலும், நகையை நேர்மையாக ஒப்படைத்த இளங்கோவை பாராட்டினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்