திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஷேக் முகமது (48). என்பவர் முகநூல் பக்கத்தில் இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தவறான பதிவுகளை பதிவிட்டு இருந்தது தெரியவந்ததால் பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில் ஷேக் முகமதின் முகநூல் பக்கத்திலுள்ள பதிவுகள் அனைத்தும் அவரின் கைப்பேசியிலிருந்து பதிவேற்றம் ஆகியுள்ளது என உறுதி செய்யப்பட்டதால் ஷேக் முகமது கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்