திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன குழந்தையின் நகையை தற்போது காவல்துறையினர் அமைத்துள்ள ஒருங்கிணைந்த கண்காணிப்பு கேமரா மூலம் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தங்கும் விடுதி உரிமையாளர் உதவியுடன் காவல்துறையினர் நகையை குழந்தையிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் குழந்தையின் பெற்றோர்கள் பழனி நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன், சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்களுக்கும், காவலர்களுக்கும் மற்றும் லாட்ஜ் உரிமையாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா