திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் கடந்த 2021 இல் ஒரு நபரை முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கில் தொடர்புடைய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் கணேசமூர்த்தியை (32). கைது செய்யுமாறு நீதிமன்றம் கடந்த (10.12.2021) அன்று பிடியாணை பிறப்பித்திருந்தது. தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை காவல்துறையினர் நான்கு ஆண்டுகளாக தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், மதுரையில் பதுங்கி இருந்த கணேசமூர்த்தியை (01.11.2025) அன்று கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















