திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் கடந்த 2016 -ம் வருடம் திருட்டு முயற்சி வழக்கில் கன்னியாகுமரி மாவட்டம், ராஜக்கமங்கலம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (54). கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்த பிறகு நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 5 ½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ரவிச்சந்திரனை உவரி காவல் நிலைய காவல்துறையினர் தேடி வந்த நிலையில் (20.02.2025) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்