திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் கடந்த 2013 -ம் வருடம் கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தென்காசி வீராணத்தை சேர்ந்த அப்பாதுரை (59). கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வந்த இவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்பாதுரையை தேவர்குளம் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் (30.01.2025) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்