திருநெல்வேலி: திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் கடந்த 2017 -ம் வருடம் கொள்ளை வழக்கில் மருதப்பபுரம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (24). கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. முத்துகிருஷ்ணனை கங்கைகொண்டான் காவல் நிலைய ஆய்வாளர் வேல்கனி தலைமையில் தேடி வந்த நிலையில் (03.01.2025) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்