திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியில் கடந்த 2022 -ம் வருடம் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட புதூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (44). கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1 வருடமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. சீதபற்பநல்லூர் காவல் நிலைய காவல்துறையினர் தேடிவந்த நிலையில் (03.12.2024) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்