திருநெல்வேலி: திருநெல்வேலி, கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2009 -ம் வருடம் ஸ்பிரிட் கடத்தல் வழக்கில் ஈடுபட்ட மதுரை, அலங்காநல்லூரை சேர்ந்த ராஜேஷ் (39). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்து , நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 14 வருடங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், குற்றவாளிக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ராஜேஷை கங்கை கொண்டான் காவல் ஆய்வாளர், வேல்கனி தலைமையில் தேடிவந்த நிலையில், கேரளா மாநிலம் கொல்லத்தில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்துறையினர் கொல்லத்திற்கு சென்று ராஜேஷை (11.10.2024) அன்று கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்