திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள வடக்கு அரியநாயகிபுரம் பகுதியைச் சோ்ந்தவர் செல்வகுமரேசன் (38). இவா், திருநெல்வேலி மாவட்ட நக்சல் தடுப்புப் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா். இவர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணி செய்தபோது, சங்கன்திரடு பகுதியைச் சோ்ந்த முப்பிடாதி(25). என்பவரை குற்ற வழக்குகள் தொடா்பாக கைது செய்த விரோதத்தில் முப்பிடாதி, கடந்த 9ஆம் தேதி இரவில் வடக்கு அரியநாயகிபுரத்தில் உள்ள செல்வகுமரேசன் வீட்டுக்கு தனது கூட்டாளிகள் இருவருடன் சென்று அங்கு நிறுத்தியிருந்த காா், வீட்டு ஜன்னல்களை அரிவாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டாா்.
இது தொடா்பாக முக்கூடல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி
சங்கன்திரடு பகுதியைச் சோ்ந்த முப்பிடாதி, அவரது கூட்டாளிகளான சேரன்மகாதேவியைச் சோ்ந்த செல்வக்குமாா் (26). ஐயப்பன் என்ற பண்ணை ஐயப்பன் (26). ஆகிய மூவரை போலீசார் (14.02.2025) அன்று கைது செய்தனா்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்