திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் தங்கமாரி. (40). இவர் குடும்பத்துடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகேயுள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 16 ஆம் தேதி இவர் பணிக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு உள்ளே பீரோவை உடைத்து, அதிலிருந்த 30 பவுன் தங்கநகையை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இவ்வழக்கு தொடர்பாக அதே குடியிருப்பில் வசித்து வரும் ஆயுதப்படை காவலரான மணிகண்டனுக்கு (31). தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரையும், அவரது நண்பரான கடையநல்லூரைச் சேர்ந்த முஹம்மது அசாரூதீன் (30). என்பவரையும் வியாழக்கிழமை இரவு கைது செய்து தங்க நகைகளை மீட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்