மதுரை: பணியின் போது உடல் நலக் குறைவின் காரணமாக இயற்கை எய்திய D4 திருப்பாலை காவல் நிலைய தலைமை காவலர் 3361 அழகர்சாமி அவர்களின் இறுதி சடங்கில் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையர்கள் தெற்கு, போக்குவரத்து அவர்களும் நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அவரது உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.