அரியலூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருள்மொழி பகுதி அருகே (27.09.2025) நேற்று இரவு சட்டவிரோதமாக மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தை, தனிநபராக மடக்கி பிடித்த தலைமை காவலர் திரு.சண்முகம் அவர்களை, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டினார்கள்.