மதுரை : ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் கடந்த (10.02.2025) முதல் (15.02.2025) வரை நடைபெற்ற 68வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு பிரிவில் (Police Photography & Videography) தமிழக காவல் துறை சார்பாக கலந்து கொண்ட குழுவில், மதுரை மாவட்டம், திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் திரு.ராஜா என்பவர் கலந்து கொண்டு வெற்றிக்கோப்பை (Winner Trophy) பெற்றுள்ளார். 68வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு பிரிவில் வெற்றிக்கோப்பை பெற்று வந்த தலைமைக் காவலர் திரு.ராஜா அவர்களை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அர்விந்த், இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்