தென்காசி : தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஸ்வநாதபுரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்தாஜ் பேகம் என்ற மூதாட்டியை கொலை வழக்கில் செங்கோட்டையை சேர்ந்த 1.அப்துல் சலாம், 2.அப்துல் ஜாபர் (56). 3.காதர் மிர்ஷா (52). 4.அமினா (40). 5.பாத்திமா பீவி (48). ஆகியோருக்கு கடந்த (27.01.26) அன்று தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்க உதவியாக இருந்த செங்கோட்டை காவல் நிலைய தலைமை காவலர், செல்வக்குமாரை தென்மண்டல காவல்துறை தலைவர், (ஐ.ஜி) விஜயேந்திர பிதாரி இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















