திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை காவல் நிலையத்தில் கடந்த 2022-ம் வருடம் போக்சோ வழக்கில் பெட்டைகுளத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் (22). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். மேற்படி குற்றவாளி நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1 வருடங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், குற்றவாளிக்கு திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் முத்துகருப்பனை திசையன்விளை காவல் ஆய்வாளர், சீதாலட்சுமி, தலைமையில் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் (10.10.2024) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்