திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் கடந்த 2017 -ம் ஆண்டு கொலை மிரட்டல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சீலாத்திகுளத்தை சேர்ந்த வினோத் கண்ணன்(28). என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் பிணையத்தில் வெளிவந்தார். இவர் கடந்த ஐந்து மாதங்களாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், வினோத் கண்ணனுக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வினோத் கண்ணனை வள்ளியூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















