திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் வருடம் கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்ட மானூர், அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த இசக்கிராஜா (30). கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் கடந்த 03 மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், சேரன்மகாதேவி குற்றவியல் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. குற்றவாளி இசக்கிராஜாவை சுத்தமல்லி காவல்துறையினர் தேடிவந்த நிலையில் (23.02.2026) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















