திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர், பாலாஜி அவன்யூவைச் சேர்ந்த முருகன் (62). ராஜவல்லிபுரம் தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த பொழுது பண மோசடியில் ஈடுபட்டதாக திருநெல்வேலி, அஞ்சல் அலுவலக உதவி கண்காணிப்பாளர், பாலகிருஷ்ணன் புகார் அளித்ததின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் இருந்து வரும் நிலையில், கடந்த 1 மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த முருகனை கைது செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவிட்டதால் (மாவட்ட குற்றப்பிரிவு – I) துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், L.G. அன்னலட்சுமி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர், கண்ணன், தலைமை காவலர், முத்துராமலிங்கம் ஆகியோர் முருகனை (29.04.2025) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்