திருநெல்வேலி: திருநெல்வேலி, பத்தமடை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 -ம் வருடம் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட பத்தமடை, சிவன் கோவில் கீழ ரத வீதியை சேர்ந்த வெங்கடேஷ் (36). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். மேற்படி குற்றவாளி நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 4 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், குற்றவாளிக்கு சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேற்படி வெங்கடேஷை பத்தமடை காவல் நிலைய காவல்துறையினர் தேடிவந்த நிலையில் (21.09.2024) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்