திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட வல்லநாடு, வண்டி மலைச்சியம்மன் கோவில்தெருவை சேர்ந்த சின்னத்துரை (33). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வந்தார். மேற்படி குற்றவாளி நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், குற்றவாளிக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேற்படி சின்னதுரையை சீவலப்பேரி காவல்துறையினர் தேடிவந்த நிலையில் (09.09.2024) இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்