திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் கடந்த 2019-ம் வருடம் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வள்ளியூர், சங்கனாபுரம், பொட்டல் புதூர் தெருவை சேர்ந்த சின்னத்துரை (29). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த மூன்று மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. சின்னத்துரையை சுத்தமல்லி காவல் துறையினர் தேடி வந்த நிலையில் (24.05.2025) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்