திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் கடந்த 2022 -ஆம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி வழக்கில் ஈடுபட்ட மேல பாலாமடையைச் சேர்ந்த சுரேஷ் (23). கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில் இவர் நீதிமன்ற விசாரணைக்கு 1 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, சுரேஷை தாழையூத்து காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்