திருநெல்வேலி: திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு போக்சோ வழக்கில் தென்கலம்புதூரைச் சேர்ந்த சூர்யா(23). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டதால் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. குற்றவாளி சூர்யாவை திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் (19.10.2025) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்