தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி நலமங்காடு பகுதியை சேர்ந்தவர் கரியராமன் (40), தொழிலாளி. இவர் மதுபோதையில், குடும்பத்தினரிடம் தகராறு செய்தார். அப்போது கரியராமன் வீட்டிலிருந்த நாட்டுத்துப்பாக்கியால் மகன் ஏழுமலையை சுட்டார். இதில் இருந்து சிதறிய பால்ரஸ் குண்டுகள் தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் ரவி (13), சாரதி (12), பிரபாத் (11), திருமலைவாசன் (13), அனிதா (16), ஆகிய 5 பேர் மீதும் பாய்ந்தது. இதில் அவர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து கரியராமன் தப்பியோடி விட்டார். காயம் அடைந்த 5 சிறுவர்களுக்கும் அரசு மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அரூர் காவல்துறையினர் , கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கரியராமனை கைது செய்தனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.