சென்னை : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தசிவராமன், (29, போலி பாஸ்போர்ட் தயாரித்தது, தொடர்பாக இவர் மீது வழக்குகள், திருச்சி ‘கியூ’ பிரிவு காவல் துறையில், நிலுவையில் உள்ளன. இவரை தேடப்படும் குற்றவாளியாக, 2017ல் காவல் துறையினர், அறிவித்தனர்.
இந்நிலையில், வெளிநாட்டில், இருந்து, சென்னை வந்த இண்டிகோ விமானத்தில், சிவராமன் வந்தார். அவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள், சோதனை செய்தனர். அதில், சிவராமன் தேடப்படும், குற்றவாளி என தெரிய வந்ததது. குடியுரிமை அதிகாரிகள், அவரை வெளியில் விடாமல், விமான நிலையத்தில், மடக்கி வைத்தனர். இது தொடர்பாக, திருச்சி ‘கியூ’ பிரிவு காவல் துறையினரக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது.