தூத்துக்குடி : கடந்த 2013ம் ஆண்டு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை மிரட்டல் வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி விளாத்திகுளத்தைச் சேர்ந்த பொன்முத்துப்பாண்டி (31). என்பவரை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (PCR Court) நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளி பொன்முத்துப்பாண்டி ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கடந்த (31.10.2025) அன்று மேற்படி நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்தது. மேலும் மேற்படி எதிரி பொன்முத்துப்பாண்டி மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் மற்றும் சங்கரலிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 6 வழக்குகளில் ஏற்கனவே பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் தொடர்ந்து பொன் முத்துப்பாண்டியை தேடிவந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. பார்த்திபன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த எதிரி பொன்முத்துப்பாண்டியை நேற்று (19.01.2026) கைது செய்து சிறையிலடைத்தனர்.
















