தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே கடந்த மாதம் 4 இடங்களில் அடுத்தடுத்து பூட்டுகள் உடைக்கப்பட்டு எல்.இ.டி. டி.வி., பணம், கோவில் உண்டியல் ஆகியவை திருட்டு போனது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, நல்லம்பள்ளி கோவில் தெருவை சேர்ந்த குற்றவாளிகள் செரபாண்டராஜ் (35), கார்த்திக் (34) சர்வான் (19), மற்றும் (17), வயது சிறுவன் ஆகிய 4 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குற்றவாளிகள் 3 பேரை கைது செய்தனர். மேலும் இந்த திருட்டில் தொடர்புடைய குற்றவாளி மாஸ்கோவை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளி மாஸ்கோவை நேற்று போலீசார் கைது செய்தனர்.