திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,சேரன்மகாதேவியில் கடந்த 2021 -ம் வருடம் கொலை முயற்சி, திருட்டு மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தெற்கு சங்கன்திரடு, நடுத் தெருவை சேர்ந்த செல்வம் (25). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். மேற்படி நபர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. குற்றவாளி செல்வத்தை சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர், தர்மராஜ் தலைமையிலான காவல்துறையினர், தேடிவந்த நிலையில் (15.10.2024) இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்