திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாயக்கனூரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி 25. கடந்த 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவரை பிடிக்க வேடசந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமதி.துர்காதேவி உத்தரவின் சப்-இன்ஸ்பெக்டர் திரு.பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், பொள்ளாச்சியில் தங்கப்பாண்டி பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் தங்கப்பாண்டியை பிடித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.