திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன் மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2017 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட பிள்ளைகுளம், குதிரை கோவில் தெருவை சேர்ந்த ராஜன்துரை (42). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். மேற்படி குற்றவாளி நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், குற்றவாளிக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. குற்றவாளி ராஜன்துரை சேரன் மகாதேவி காவல் துறையினரால் தேடிவந்த நிலையில், (05.09.2024) இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்