திண்டுக்கல்: திண்டுக்கல், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2000-ம் ஆணடு பொது சொத்து சேதம் விளைவித்த வழக்கில் கோவிந்தராஜ்(50). என்பவரை பழனி தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து கோவிந்தராஜ் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் பழனி நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இது குறித்து S.P.பிரதீப் உத்தரவின் பேரில் பழனி DSP.தனஞ்செயன் மேற்பார்வையில் பழனி தாலுகா ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சந்திரன், அருண்பிரசாத், SSI. வேலுமணி காவலர்கள் கார்த்திக், சோலை உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தேனியில் பதுங்கி இருந்த கோவிந்தராஜை செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா