திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் திண்டுக்கல், YMR-பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் வடிவேல்(44). என்பவரை நகர் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து வடிவேல் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இதுதொடர்பாக நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வடிவேலை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா