திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., அறிவுறுத்தலின் படி கிழக்கு காவல் துணை ஆணையர், V.வினோத் சாந்தாராம் தலைமையில் அருனா கார்டியா கேர் மருத்துவமனை சார்பில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் (12.02.2025) ம் தேதி, நடைபெற்ற தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிவதோடு உடன் பயணிக்கும் குழந்தைகளும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுரை வழங்கி பெற்றோர்களுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த 25 சிறுவர்களுக்கு காவல் துணை ஆணையர், வினோத் சாந்தாராம் தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் போக்குவரத்து பிரிவு உதவி ஆணையர், அசோக் குமார் போக்குவரத்து காவல் ஆய்வாளர், செல்லத்துரை மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்