உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.சேரலாதன் அவர்கள் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டுகளுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கினார். சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்துக் காவல் துறையில் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர் பால்தாமஸ், முன்னாள் ராணுவ வீரர் மாறவர்மன் ஆகியோர் இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகளை விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சுமார் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா