திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின்பேரில் (04.03.2026) SJHR உதவி ஆய்வாளர்கள் தலைமையில் கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு POCSO சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு, இணையவழி குற்றங்கள், போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், அவசர உதவி எண்கள் 181, 1098, மற்றும் Kaaval Udhavi App குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மேலும், திருப்பத்தூர் கிராமிய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஆனந்தராஜ் மற்றும் காவல்துறையினர் வெங்களாபுரம் JN பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மற்றும் அபாயகரமாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை எச்சரித்து, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.















