நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாகை அவுரித்திடலில் துவங்கிய பேரணியை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சு.செல்வக்குமார் இ .கா.ப அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். பேரணி பப்ளிக் ஆபீஸ் ரோடு, தம்பித்துரை பூங்கா, புதிய பேருந்து நிலையம், நாகை அரசு தலைமை மருத்துவமனை, அண்ணா சிலை வழியாக மீண்டும் அவர் திடல் வந்தடைந்தது.
இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என பொது மக்களுக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாலையில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 50 வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சு.செல்வகுமார் இ.கா.ப அவர்கள் தலைக்கவசம் வழங்கினார். இதில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்றனர்.