செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட தலித் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்களை SC பட்டியலில் இனத்தில் சேர்க்க தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவ சமுதாயத்தினர் சமூக அரசியல் பொருளாதாரம் கல்வி கலாச்சாரம் சட்டப் பாதுகாப்பு வேலை வாய்ப்பு துறைகளில் மிகவும் பின் தங்கியுள்ளதால் முட்டுக்கட்டையாக இருக்கும் தலித் கிறிஸ்தவர்களில் எஸ் சி பட்டியலில் சேர்க்காமல் இருப்பதினால் அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் பல தலைமுறைகள் மிகவும் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளார்கள். எனவும் மத்திய மாநில அரசுகள் தலித் கிறிஸ்தவர்களை எஸ் சி பட்டிலில் சேர்க்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆயர் டாக்டர் நீதிநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் செங்கல்பட்டு மதுராந்தகம் மறைமலைநகர் காஞ்சிபுரம் பல்லாவரம் ஆயர் பேரவை நிர்வாகிகள் பல்வேறு கட்சி சார்ந்த நிர்வாகிகள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்