திண்டுக்கல் : திண்டுக்கல் K.R நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் மனைவி விமலா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று பத்து ஆண்டுகள் ஆகின்றன இரண்டு குழந்தைகள் உள்ளனர். விமலா தனது மாமனார் குருமூர்த்தி தன்னை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்வதாக கூறி விஷம் அருந்தி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து விமலா கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி மாமனார் குருமூர்த்தி மாமியார் பஞ்சவர்ணம் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக இரண்டு வருடம் ஒன்றாக வசித்து வந்தோம். ஒன்றாக வசித்த பொழுது, மாமனார் பாலியல் தொந்தரவு அடிக்கடி கொடுத்ததாகவும், அதன் காரணமாக அவர்களை விட்டு கடந்த எட்டு வருடங்களாக கணவன் மனைவி குழந்தைகள் என தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார் விமலா.
தனது கணவர் இருசக்கர வாகன மெக்கானிக் தொழில் நடத்தி வந்த நிலையில் கடந்த கொரோனா காலங்களில் தொழில் பாதிக்கப்பட்டு கடனாளியாக ஆகிவிட்டனர். ஏற்கனவே தான் கொடுத்த பணம் மற்றும் நகையில் காம்ப்ளக்ஸ் வளாகம் கட்டி வந்த மாமியார் மாமனாரிடம், நகைக்கான பணம் கேட்க போய், எனது கணவனை விட்டுவிட்டு குழந்தைகளுடன் வந்தால் காப்பாற்றுவேன் என்ற கெட்ட எண்ணத்தில் மாமனார் கூறியுள்ளார். மாமியார் வெளியே சென்று இருந்த ஒரு நாளில் தன் மீது அத்துமீறி தான் அணிந்திருந்த நைட்டியை கிழித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த விமலா விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.