தர்மபுரி: தர்மபுரி வெண்ணாம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 32). இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இவர் கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியை சேர்ந்த சரவணகுமார் (வயது 32) என்பவரிடம் கார் வாங்க கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொடுத்த கடனை பலமுறை திரும்ப கேட்டும் ராஜசேகர் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சரவணகுமார் நேற்று தர்மபுரி வந்து ராஜசேகரின் 7 வயது மகனை கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து தர்மபுரி நகர காவல் நிலையத்தில் ராஜசேகர் அளித்த புகாரின் மேல் நடவடிக்கை எடுத்த போலீசார், சரவணகுமார் செல்போன் சிக்னலை வைத்து அவர் கோயம்புத்தூர் செல்வதை கண்டறிந்த தனிப்படையினர் கோயம்புத்தூர் விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த சரவணகுமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர். புகார் அளித்த பத்து மணி நேரத்தில் சிறுவனை பத்திரமாக மீட்ட தனி படையினருக்கு டிஎஸ்பி பாராட்டும் வெகுமதியும் வழங்கினார்.
தர்மபுரியிலிருந்து நமது போலீஸ் நியூஸ் பிளஸ் நிருபர்
திரு.மோகன் தாஸ்