திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருமத்துப்பட்டி பகுதியில் நேற்று (24.01.2025) காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்த கரண் (26). என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 2.400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக கன்னிவாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மேற்கொண்ட விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















