குமரி: டி.ஜி.பிஜே.கே. திரு.திரிபாதி இன்றுடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டி.ஜி.பி.யாக திரு.சைலேந்திரபாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.1987ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான சைலேந்திர பாபு 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் எஸ்.பியாகவும், சென்னை அடையாறில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி.யாகவும் முத்திரை பதித்தவர் திரு.சைலேந்திரபாபு.
2010-இல் கோவையில் ஆணையராக இருந்தபோது, பள்ளிக்குழந்தைகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பதவியேற்றுக் கொண்ட சைலேந்திர பாபு கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டி.ஜி.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்.சிறைத்துறை தலைவராக இருந்தபோது கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார்.
தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை டி.ஜி.பி.யாக இருந்தவர். ரயில்வே காவல்துறை டி.ஜி.பி.யாக தற்போது பதவி வகிக்கிறார்.குடியரசுத்தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்கான பிரதமரின் பதக்கம், வீரதீர செயல்களுக்கான முதல்வர் பதக்கம் உள்ளிட்டவற்றை பெற்றவர்.திரு.சைலேந்திர பாபு.