தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் வைத்திருந்த வழக்கில் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கோவில் (57). என்பவரையும், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கூடலிங்கம் (29). மற்றும் சுடலைமுத்து (19). ஆகியோர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க நாசரேத் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை.சிலம்பரசன் அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி 3 குற்றவாளிகளை (29.01.2026) போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
















