சென்னை : கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 -ன் படி 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்திய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், (24×7) அனைத்து நாட்களிலும் இயங்கலாம். என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசு ஆணை மற்றும் நீதிப் பேராணைகளை பின்பற்றுமாறு அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளையில் சட்ட விரோத செயல்களோ, தடை செய்யப்பட்ட செயல்பாடோ கண்டறியப்பட்டால் சட்டப்படி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம். என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், படைத்தலைவர் முனைவர் திரு. செ.சைலேந்திரபாபு¸ IPS.¸ அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.