திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் (09.12.2023) ம் தேதி திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.அபிநவ் குமார் இ.கா.ப அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள், முன்னிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2023-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு (10.12.2023) ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்வு பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த எழுத்து தேர்வு திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 தேர்வு மையங்களில் ஆண்கள்-7370, பெண்கள்-1829உட்பட 9,199 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 1000 போலீசார் ஈடுபட உள்ளனர். இக்கூட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், அவர்கள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா