சென்னை: தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் 2019 – 20 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கிற்கான பகுதி ஈவுத் தொகையான ரூ.1.92 கோடியை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ம.நா.மஞ்சுநாதா, இ.கா.ப., அவர்கள் வழங்கினார்.
தமிழக காவல்துறை இயக்குனர் திரு.ஜே.கே. திரிபாதி,IPS, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால்,IPS மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை டிஜிபி திரு.சைலேந்திர பாபு,IPS ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்